சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பிரதமர் மோடிக்கு ஜெர்சி பரிசளிப்பு..!!!
இந்திய பிரதமர் நரேந்திரமோடியை அர்ஜெண்டினாவில் FIFA தலைவர் சந்தித்து மோடிக்கு நீல நிற ஜெர்சியை பரிசளித்துள்ளார்.
ஜி20 உச்சி மாநாட்டிற்க்காக அர்ஜெண்டினா சென்ற பிரதமர் மோடியை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA தலைவரான கியான்னி இன்பாண்டினோ (Gianni Infantino) சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடி பெயர் அச்சிடப்பட்ட நீல நிற ஜெர்சியை மோடிக்கு பரிசளித்தார்.
இதை சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதில் அர்ஜெண்டினாவில் இருந்து கொண்டு கால்பந்தை பற்றி யோசிக்காம இருப்பது சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.மேலும் அர்ஜெண்டினா கால்பந்து வீரர்கள் எல்லாம் இந்தியாவில் மிக பிரபலமானவர்கள் என்று பதிவிட்ட மோடி தனக்கு ஜெர்சியை பரிசளித்த FIFA தலைவரின் அன்புக்கு நன்றிக் கூறிக் கொள்வதாக ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.