சரக்கு வேண்டும்….விமானத்தில் தகராறு…பைலட் மீது எச்சில் துப்பி ரகளை செய்த பெண் பயணி…!!

Default Image
ஏர் இந்திய விமானத்தில் விமான பைலட் மீது எச்சில் துப்பி கெட்டவார்த்தைகளால் திட்டி வெளிநாட்டு பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.
சமீபத்தில் ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் குடிகார பெண் ஒருவர் அதிக மது கொடுக்காததால் தகராறில்  ஈடுபட்டு உள்ளார். நான் ஒரு சர்வதேச வக்கீல் நீங்கள் பணம் பறிப்பவர்கள் என கூறி  தகராறில் ஈடுபட்டு உள்ளார். மேலும் விமான பைலட் மீது எச்சில் துப்பி உள்ளார். அங்கிருந்தவர்களை மோசமான கெட்டவார்த்தைகளால் திட்டி தீர்த்து உள்ளார்.
ரவுடி போல் நடந்து கொண்ட அந்த பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில்  வைரலாகி உள்ளது.
அந்த விமானம் லண்டன் சென்றடைந்ததும் அந்த பெண் கைது செய்யப்பட்டு உள்ளார். லண்டனுக்கு சென்ற அந்த ஏர் இந்திய விமானத்தின் நேரம் மற்றும் விமானத்தின் தகவல் தெரியவில்லை.
மற்றொரு வீடியோவில், அந்த பெண் “பாலஸ்தீன மக்களுக்கு உதவிய ஒரு “சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர்” என்று கத்தினார்.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்