சதமடித்து சாதனை புரிந்த விக்கெட் கீப்பர் ரிஷப்……!!!
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பாண்ட், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் சில சாதனைகளை புரிந்துள்ளார். ஆசியாவுக்கு வெளியே சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர், சதமடித்த இளம் இந்திய விக்கெட் கீப்பர், 4ஆவது இனிங்சில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர், டெஸ்டில் முதல் சதத்தை சிக்சருடன் பூர்த்தி செய்த இந்தியர் ஆகியவைதான் ரிஷப்பின் சாதனை.