"ச‌த‌க்…ச‌த‌க்", பிரித்தானியாவில் ப‌ர‌வும் க‌த்திக் குத்து க‌லாச்சார‌ம்.

Default Image

 
க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் ம‌ட்டும் நாடு முழுவ‌தும் 37000 க‌த்திக் குத்து குற்ற‌ங்க‌ள் இட‌ம்பெற்றுள்ள‌ன‌. 80 பேர் ப‌லியாகியுள்ள‌ன‌ர். இந்த‌க் குற்ற‌ச் செய‌ல்க‌ளில் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் 25 வ‌ய‌துக்கும் குறைந்த‌ இளைஞ‌ர்க‌ள். பெரும்பாலும் தெருவில் ந‌ட‌மாடும் எல்லா இளைஞ‌ர்க‌ளும் த‌ற்பாதுகாப்புக்காக‌வாவ‌து க‌த்தி கொண்டு திரியும் அள‌விற்கு நிலைமை மோச‌ம‌டைந்துள்ள‌து.

வ‌றுமைக்கும் குற்ற‌ச் செய‌ல்க‌ளுக்கும் நெருங்கிய‌ தொட‌ர்பிருப்ப‌தை இந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் எடுத்துக் காட்டுகின்ற‌ன‌. குறிப்பாக‌ பிரித்தானியாவின் பெரும் ந‌க‌ர‌ங்க‌ளில், அதிலும் வ‌றுமையான‌ ப‌குதிக‌ளில் தான் க‌த்திக் குத்து ச‌ம்ப‌வ‌ங்க‌ள் அதிக‌மாக‌ ந‌ட‌க்கின்ற‌ன‌. அந்த‌ப் ப‌குதிக‌ள் தான் பெரும‌ள‌வு குடியேறிக‌ள் ச‌மூக‌ங்க‌ளை கொண்டுள்ள‌ன‌. பிரித்தானியாவில் பெரும்பாலான‌ வெளிநாட்டுக் குடியேறிக‌ள் வ‌றுமையில் வாழ்கின்ற‌ன‌ர்.
அர‌சாங்க‌த்தின் பாராமுக‌மும் க‌த்திக் குத்து குற்ற‌ங்க‌ள் பெருகுவ‌த‌ற்கு கார‌ண‌மாக‌ உள்ள‌து. ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கும் அள‌வுக்கு, அர‌சு இந்த‌க் குற்ற‌ங்க‌ளை க‌ண்டுகொள்வ‌தில்லை. அத்துட‌ன் அர‌சு செல‌வின‌க் குறைப்பு கார‌ண‌மாக‌ காவ‌ல்துறைக்கு நிதி ஒதுக்குவ‌து குறைந்து விட்ட‌து. இத‌னால் தெருவில் ந‌ட‌மாடும் பொலிசாரின் எண்ணிக்கையும் குறைந்து விட்ட‌து.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்