க/பெ. ரணசிங்கம் படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய புதிய பாடல்வெளியீடு..!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்துள்ள திரைப்படம் க/பெ. ரணசிங்கம் இந்த படத்தை இயக்குனர் விருமாண்டி அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூறபடுகிறது.
மேலும் அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கு எதிராக சாதாரண மக்கள் போராடுவது போன்ற காட்சிகளை படமாக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி இணையத்தளத்தில் வெளியாவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் அறிவிக்கப்பட்டது .
அதன்படிவருகின்ற அக்டோபர் மாதம் 2 இந்த திரைப்படம் ஓடிடி இணையத்தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞர் வைரமுத்து எழுதிய பறவைகளோ என்ற பாடல் தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
A song that speaks about the life of people who migrated from homeland and their families who live expecting their safe return – #Paravaigala from #KaPaeRanasingam from tomorrow @5PM…@VijaySethuOffl @aishu_dil @kjr_studios @LahariMusic https://t.co/Hj1oqOuHBl
— Ghibran (@GhibranOfficial) September 22, 2020