கொய்யா பழத்தின் பலன்கள் :
கொய்யாப்பழம் மிகவும் நல்ல சத்துக்களை கொண்ட பழமாகும். கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.
கொய்யப் பழத்தில் வைட்டமின் ‘பி 9’ அல்லது போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த போலிக் அமிலம் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது.
இது பார்வை திறனை மேம்படுத்துகிறது. சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துகிறது. கொய்யப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்பக புற்றுநோய் செல்கள் அளிக்கப்படுகிறது.