தந்தையை புதிய பி.எம்.டபிள்யூ காரில் வைத்து புதைத்த பாசக்கார மகன்..!
நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தை சேர்ந்த அஷுபுய்க் என்பவர், தனது தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். மரணமடைந்த பின்னர் சொகுசு காரில் வைத்து உங்களை புதைப்பேன் என அஷுபுய்க் தனது தந்தையிடம் அன்பு பொங்க வாக்குறுதி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் அவர் தந்தை மரணமடைய, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் விதமாக புதிதாக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை வாங்கி அதில் தனது தந்தையை வைத்து அடக்கம் செய்துள்ளார் அஷுபுய்க். இந்த செய்தி உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியானதை அடுத்து பலர் இந்த சம்பவத்தை கிண்டல் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னர் சீனாவில் ஒரு வாலிபர் தனது ஆசை காரை தனது மரணத்திற்கு பின்னர் தன்னுடனே புதைக்க வேண்டும் என கூற்றின் படி, அவர் மரணமடைந்த பின்னர் காரில் வைத்து புதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.