கொஞ்சம் தண்ணி இருந்தா கொடுங்க!சுற்றுலாப் பயணியிடம் கெஞ்சி தண்ணி குடித்த அணில்!
சுற்றுலாப் பயணியின் தண்ணீர் பாட்டிலில் அமெரிக்காவில் தாகம் தணித்த அணிலின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அரிசோனா மாகாணத்தில் உள்ள கிராண்ட் கேன்யான் ((Grand Canyon)) என்ற பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணி ஒருவர் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கடுமையான வெயிலால் பாதிக்கப்பட்ட அணில் ஒன்று அவரைப் பின் தொடர்ந்து வந்தது.
அப்போதுதான் அணில் தாகத்தில் இருப்பதைக் கண்ட அந்த சுற்றுலாப் பயணி, தான் வைத்திருந்த தண்ணீரை அணிலுக்கு ஊட்டினார். சில நொடிகளில் தண்ணீர் பாட்டிலை இறுகப் பற்றிக் கொண்ட அணில் வயிறு முட்ட தண்ணீர் அருந்தியது. இந்தக் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.