கைதி தப்பி ஓட்டம்…விரட்டி சென்று பிடித்த நீதிபதி…வைரலாகும் வீடியோ..!!
நீதிமன்ற விசாரணையின் போது தப்பி ஓடிய இரு கைதிகள்; துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த நீதிபதி வைரலாகும் வீடியோ..
நீதிமன்ற வளாகத்தில் விசாரணையின்போது தப்பி ஓடிய இரண்டு கைதிகளில் ஒருவரை துரத்திச் சென்ற நீதிபதி அவரை மடக்கிப் பிடித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.வாஷிங்டனில் லூயிஸ் கவுன்ட்டி மாவட்ட நீதிமன்றம் உள்ளது. அங்கு நீதிபதி பஸார்ட் தலைமையில் விசாரணை நடந்துகொண்டிருந்தது. அப்போது டேனர் ஜேக்கப்சன் (22) மற்றும் கோடே ஹோவர்ட் (28) ஆகிய இரு கைதிகள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தனர். இருவரின் கைகளிலும் விலங்கு மாட்டப்பட்டிருந்தது.திடீரென இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். கூண்டில் இருந்து இறங்கி ஓடினர். எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் அங்கிருந்தோர் திகைத்து நின்றனர். ஆனால் சுதாரித்த நீதிபதி பஸார்ட் தனது நாற்காலியில் இருந்து குதித்தார். தனது அங்கியைக் கழற்றி வீசிய அவர், அவர்களைத் துரத்திச் சென்றார்.கைவிலங்கோடு நீதிமன்ற வளாகம், படிக்கட்டுகளில் கைதிகள் பாய்ந்தோடிச் சென்றனர். அவர்களில் ஹோவர்டை மடக்கிப் பிடித்தார் நீதிபதி. வெளியே ஓடிய ஜேக்கப்சனை நீதிமன்றக் காவலர்கள் பிடித்து ஒப்படைத்தனர்.

dinasuvadu.com
வீடியோ:
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீதிபதி பஸார்டுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.