கெட்டவார்த்தையால் சர்சைக்கு ஆளான ட்ரம்ப்! ட்ரம்புக்கு எதிராக ஐநாவில் தீர்மானம் …..
ஐநா.வின் ஆப்பிரிக்க தூதுவர்கள் அமெரிக்க அதிபரின், “நிறவெறி, பிறர் மீதான கடும் துவேஷ, இழிவான” கருத்துக்கு எதிராக ஒன்று திரண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து கறுப்பர்களுக்கு எதிராகவும் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராகவும் பேசியும் செயல்பட்டு வருவது மிகவும் கவலையளிக்கக் கூடியது என்று தெரிவித்தனர்.
ட்ரம்ப் தன் வார்த்தைகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்திய 54 நாடுகள், அமெரிக்காவில் அனைத்து தரப்பிலிருந்தும் ட்ரம்பின் அருவருக்கத்தக்க இந்தப் பேச்சுக்குத் தெரிவித்த கண்டனங்களை வரவேற்றுள்ளனர். 4 மணி நேர ஐநா விவாதங்களுக்குப் பிறகு ட்ரம்ப் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.