கூட்டணிக்காக பதவியை தூக்கி எறிந்த அமைச்சர் ..!!

Default Image

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நடைபெறும் தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என மாயாவதி அண்மையில் தெரிவித்தார்.
கர்நாடகாவில் மாயாவதியின் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் என்.மகேஷ், ஹெச்.டி குமாரசாமியின் கேபினட்டிலிருந்து பதவி விலகியுள்ளார். அங்கு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் மாயாவதியின் கட்சியுடன் நட்புறவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தான் பதவி விலகியதற்கு சொந்த காரணம் இருப்பதாகவும், இது குறித்து மாயாவதியிடம் ஆலோசனை நடத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கேபினட் அமைச்சராக பதவி விலகுகிறேன் ஆனால், எம்.எல்.ஏ-வாக ஜனதா தளம் மற்றும் குமாரசாமியை ஆதரிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
வரும் தேர்தலில், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸூடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று மாயாவதி அறிவித்த பின்னரே பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமா குறித்து மாயாவதி மற்றும் அவரது கட்சி சார்பில் எந்த கருத்தும் கூறப்படவில்லை.

இதுதொடர்பாக மகேஷ் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், அவரது கட்சி மண்டயா மற்றும் ராம்நகர் தேர்தலில் ஜனதா தளத்திற்கு அதரவாக நிற்கும் என்று கூறினார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்