கூகுளை குறைக்கூறி..!! மறுபடியும் இதுபோல் நடக்ககூடாது..!!என எச்சரித்த டிரம்ப்..!!
கூகுள் நிறுவனம் தேடு பொறியில் ஒரு சார்பான தகவல்களை தருவதால் அதை முறைப்படுத்த நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூகுளை எச்சரித்துள்ளார்.
கூகுளில் “டிரம்ப் நியூஸ்” எனத் தேடினால் போலி ஊடகங்களால் வெளியிடப்பட்ட பொய் செய்திகளே வருவதாகவும், கூகுள் நிறுவனம் தம்மையும் தமது கட்சியினர் குறித்த நல்ல தகவல்களையும் மறைத்து கெட்ட தகவல்களை மட்டும் முதலவதாக தருவதாகவும் டிவிட்டரில் அதிபர் டிரம்ப் சாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல்கூகுளை முறைப்படுத்த நேரிடும் என்பது போன்றும் எச்சரித்திருந்தார்.
இதுகுறித்து தெரிவித்த கூகுள் நிறுவனம் தாங்கள் எந்த ஒரு அரசுக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ தகவல்களை முதன்மைப்படுத்தித் தருவதில்லை என மறுத்துள்ளது. அல்காரிதம் படி தேடுபொறியில் அவர்கள் வசிக்கும் பகுதி, முந்தைய தேடல்கள், அதிகம் பார்க்கப்பட்டவை உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே தகவல்களை கூகுள் தேடி தருவதாகவும் விளக்கமளித்துள்ளது.அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்வது அதிபர் ட்ரம்புக்கு வாடிக்கையாகி போய்விட்டது.
DINASUVADU