குழந்தை வளர்ப்பான் வசம்புக்கு இவ்வளவு சிறப்புகளா?!!

Default Image
விஷத்தை முறிக்கும் குணம் வசம்புக்கு உண்டு. குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி நாக்கில் தெயப்பதுண்டு. ஏனென்றால், குழந்தை சாப்பிடும் உணவால் எந்தவித விஷத்தன்மையும்  குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படுகிறது.

 

வசம்பு எவ்வளவு கொடிய விஷத்தையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டும்.

வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கும். வசம்பு எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

 

வசம்பை விஷம்அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும். மேலும் கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது. நமக்கு பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும்.

 

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றும்  காய்ந்த வசம்பு துண்டுகளை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பதுண்டு.

 

இதன் காரணமாக வசம்பு பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது

 

மேலும் சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்