குலோப் ஜாமூன் சாப்பிட்டு இருப்பிங்க…!!! ஆனா நிலக்கடலை குலோப் ஜாமூன் சாப்பிட்டு இருக்கீங்களா…?

Default Image

குலோப்ஜாமூன் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு உணவு வகைகளில் ஒன்று. இந்த உணவை சிறியவர்கள்  பெரியவர்கள் வரை விருப்பி சாப்பிடுவதுண்டு. இந்த குலோப்ஜாமூனை நாம் நமது வீடுகளிலேயே செய்து சாப்பிடுவதுண்டு.

இதுவரை நாம் குலோப்ஜாமூன் கேள்வி பட்டிருப்போம். ஆனால் நிலக்கடலை குலோப்ஜாமூன் கேள்விபட்டிருக்கிறீர்களா? இதன் செய்முறை பற்றி பார்ப்போம்.

Image result for குலோப் ஜாமூன்

தேவையான பொருட்கள் :

  • நிலக்கடலை – ஒன்றரை கப்
  • முந்திரி பருப்பு – 15
  • பால் – கால் லிட்டர்
  • மைதா – ஒன்றரை கப்
  • சர்க்கரை – கால் கிலோ
  • பேக்கிங் பவுடர் – 1 சிட்டிகை
  • ஏலக்காய் – 3
  • கேசரி பவுடர் – 1 சிட்டிகை
  • எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை :

நிலக்கடலையை வறுத்து தோல் நீக்க வேண்டும். பின் நிலக்கடலை மற்றும் முந்திரி இரண்டையும் பாலில் ஊற வைத்து கொள்ள வேண்டும். பிறகு ஊறிய பருப்புகளை எடுத்து விழுதாக அரைக்க வேண்டும்.

Image result for குலோப் ஜாமூன்

அரைக்கும் போது தண்ணீர், பால் போன்று எதுவும் சேர்க்க கூடாது. அரைத்த விழுதுடன் மைதா, பேக்கிங் சோடா, ஏலப்பொடி, கேசரி பவுடர் சேர்த்து உருண்டை பிடிக்கும் பதத்திற்கு பிசைய வேண்டும். இறுகலாக பிசைந்தால் எண்ணெய்யில் போடும் போது உடைந்து விடும்.

மென்மையான பதத்தில் பிசைய வேண்டும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக பிடிக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும். காய்ந்ததும் உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர், ஏலக்காய் தட்டி போட்டு ஜீரா செய்ய வேண்டும். பொரித்த உருண்டைகளை ஜீராவில் போட்டு ஊறிய பிறகு எடுத்து பரிமாற வேண்டும். இப்பொது சுவையான நிலக்கடலை குலோப் ஜாமூன் ரெடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update