கும்பத்தால் கொழுவை வணங்க வேண்டிய நேரம்…!!
நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும்.
குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.கும்பத்தை அம்பாள் போல் வடிவமைத்தும் வழிபடலாம்.
அதன் பின் வரிசையாக படிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கொழுபொம்மைகளை வரிசை படி அமைத்து அதன்பின் நடுவில் கும்ப கலசத்தை வைத்து வணங்க வேண்டும்.
9 இரவுகள் கொண்டாடப்படும் இந்த விழாவனது சுமங்கலி பெண்களை அம்பிகையாக பாவித்து கொழுவின் முன் பாடல்கள்,கீர்த்தனைகள்,ஸ்லோகங்கள் போன்றவற்றை பாடி வணங்க வேண்டும்.கலசத்தை வைத்து வழிபட்டால் சகல வித பலன்களும் கிட்டும் என்பது சித்தம்.
சுமங்கலி பெண்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதால் தங்களின் கணவன்மார்களின் ஆயுள் அதிகரித்து தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள்,மேலும் மூன்று தேவியரின் பூரண அருள் கிடைக்கும் மேலும் வெற்றியை வாழ்வில் அள்ளிதரும் நவராத்திரி வணங்கி நலன்களை பெற்று மகிழ்வோம் நலம்…,
DINASUVADU