குதிரையேற்ற பந்தயத்தை பிரபலப்படுத்த அரசு நிதியுதவி வழங்க வேண்டும் : பெளவாட் மிர்ஸா
குதிரையேற்ற பந்தயத்தை மேலும் பிரபலப்படுத்த அரசு நிதிஉதவி வழங்க வேண்டும் என ஜகார்த்தா ஆசிய போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் பெளவாட் மிர்ஸா கோரியுள்ளார். பெங்களூரில் அவர் வியாழக்கிழமை கூறியதாவது, நாட்டுக்கு பதக்கம் பெற்றுத் தரும் விளையாட்டுகளில் ஒன்றாக குதிரையேற்ற பந்தயம் உள்ளது.
இதை நாடு முழுவதும் பிரபலப்படுத்த அரசு நிதிஉதவி செய்ய வேண்டும். இங்கிலாந்து, தாயலாந்து, ஜப்பான், ஜெர்மனியை முன்மாதிரியாக கொண்டு செயல்படலாம். குதிரையேற்றத்தை பிரபலப்படுத்த ஒரு இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
அந்நாட்டு அரசுகள் வீரர்களுக்கு நிதிஉதவி அளிக்கின்றன. இந்த விளையாட்டுக்கு பெருந்தொகை தேவைப்பாடு நிலையில் அரசு இத செய்யலாம்.