குங்கும பூ சாப்பிட்டால் குழந்தை சிகப்பாக பிறக்காத !! இதை படியுங்கள் ..
குங்கும பூ அழ உடனே நமக்கு நியாபகம் வருவது கர்ப்பமாக இருப்பவர்களுக்கு அதனை கொடுத்தால் குழந்தை நல்ல கலராக இருக்கும் என்பது தான்.ஆனால் அதனை கொடுத்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா என்பது தெரியாமலே கணவன்மார்கள் உடனே குங்கும பூ வாங்கி கொடுப்பார் .ஆனால் உண்மையிலேயே குங்கும பூ கொடுப்பதால் குழந்தை கறுப்பாகவே பிறக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .அதனை பற்றி கீழே காண்போம் .
குங்கும பூ
குங்கும பூ தாவரத்தின் நுனியில் இருந்து கிடைக்கும் காம்புகளை தான் குங்கும பூ என்கிறோம். இந்த பூ அக்டோபர் ஜனவரி மாதத்தில் தான் அதிகமாக கிடைக்கின்றன .165000 பூ வில் இருந்து வெறும் 1 கிலோ பூ தான் கிடைக்கும் .தரமான பூ கிடைக்கவேண்டும் என்றால் 6 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகள் நிலத்தில் பயிரிட வேண்டும் .அப்போது தான் தரமான பூ கிடைக்கும் .இதனால் இதன் விலை அதிகமாக உள்ளது.
சிறந்த பூ
பொதுவாக இந்த குங்கும பூ இந்தியாவில் காஸ்மீர் அதன் பின் ஸ்பெயின் ஈரான் கிறிஸ் நாடுகளில் அதிகமாக உற்பத்தி செய்ய படுகின்றன. இதில் ஸ்பெயின் நாட்டில் வளரும் குங்கும பூ தான் தரமான குங்கும பூ ஆகும் . தரமான குங்கும பூ என்றால் அதில் 80 சதவிகிதம் சிகப்பாகவும் 20 சதவிகிதம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.தரமற்ற குங்கும பூ வில் 20 சதவிகிதம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் .
குங்கும பூ சாப்பிட்டால் குழந்தை சிகப்பாக பிறக்குமா?
கர்ப்பமாக இருப்பவர்கள் குங்கும பூ சாப்பிட்டால் குழந்தை சிகப்பாக பிறக்குமா என்றால் அது சந்தேகம் தான் .ஏனென்றால் குழந்தை சிகப்பாக பிறப்பது அவரவர் பரம்பரை ஜீன்களில் உள்ளது .
கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது
கர்ப்பமாக இருக்
கும் பெண்கள் 5 மாதத்தில் இருந்து 9 மாதம் வரை குங்கும பூ சாப்பிடலாம் .இதனால் இரத்தம் சுத்திகரிக்க படும்.மேலும் குழந்தை பிறந்த பின்பும் சாப்பிடலாம் .அது இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.இருப்பினும் இதனை அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது. மேலும் கர்ப்பமாக இருப்பவர்களுக்கு சளி ,இருமல் இருந்தால் அது குழந்தையின் நலனை பாதிக்கும். எனவே அப்போது குங்கும பூ எடுத்து கொண்டால் சளி,இருமல் வராமல் பார்த்துக்கொள்ளும் .
நல்ல குங்கும பூ கண்டுபிடிப்பது
நீங்கள் வாங்கும் குங்கும பூ நல்ல பூவா என்பதை கண்டு பிடிக்க அதனை சிறிது எடுத்து கொதிக்க வைத்த வெந்நீரில் போட்டால் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறும்.மேலும் அந்த நீர் நறுமணம் எடுக்கும். மற்ற குங்கும பூவை போட்டால் அது உடனே சிகப்பு நிறமாக மாறும் மேலும் நறுமணம் இருக்காது.
எனவே குங்கும பூ வாங்கும் போது கவனமாக வாங்குங்கள்.அது உடலுக்கு தேவையான நல்ல குணங்களையும் கொண்டுள்ளது.அதிக அளவு எடுத்து கொள்ளாமல் சரியான அளவு சாப்பிடுங்கள் .