கீழாநெல்லி : மஞ்சள் காமாலை குணபடுத்தும்

Default Image

கீழாநெல்லி, மஞ்சள் காமாலையை குணப்படுத்தும், சிறுநீர்தாரை எரிச்சலை சரிசெய்யும். தோல்நோய்களை குணப்படுத்த கூடிய குணமும்  கீழாநெல்லிக்கு உண்டு அதனை கீழே காணலாம். 

கீழாநெல்லி இலைகளின் கீழ்  கொத்தாக காய்கள் இருக்கும். இது மிகுந்த கசப்பு உடையது. இந்த காய்கள்  ஈரல் நோய்களை குணப்படுத்துகிறது. கல்லீரல், மண்ணீரலுக்கு மருந்தாகிறது. தோல்நோய்களை போக்கும் தன்மை உடையது. தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பை போக்கும். பித்தத்தை போக்கும். வெள்ளைபோக்கு பிரச்னையை தீர்க்கிறது.  கீழாநெல்லியை அரைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து உப்பில்லாத மோரில் சேர்த்து கலக்கவும். இது மஞ்சள் காமாலையை போக்கும் தன்மை கொண்டது.

இந்த சாறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர மஞ்சள் காமாலை சரியாகும். இந்த சமயத்தில், மஞ்சள் காமாலைக்கான பத்திய உணவு எடுக்கவும்.

கீழாநெல்லி இலைசாறு 10 முதல் 20 மில்லி சேர்த்து கலந்து காலை, மாலை குடித்துவர வெள்ளைப்படுதல் சரியாகும். உடல் பலவீனம் சரியாகும். உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சி தருகிறது.இது சிறுநீரக எரிச்சலை குணபடுத்தும்.

மஞ்சள் காமாலையால் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை ஏற்படும். இது அதிகரிக்கும்போது ஈரல் வீக்கம் ஏற்படும். இப்பிரச்னையை சரிசெய்யும் மருந்தாகிறது. கீழாநெல்லியின் இலை, வேர், காய் அனைத்தும் மருந்தாகிறது. கீழாநெல்லியின் வேர் 10 கிராம் அளவுக்கு எடுத்து நசுக்கி பால் அல்லது மோரில் கலந்து குடிக்கும்போது ஈரல் நோய்கள் சரியாகும். எண்ணெயில் இட்டு காய்ச்சி தலைக்கு போடும்போது குளிர்ச்சி தரும். கண்களில் சிவப்பு தன்மை, எரிச்சலை போக்குகிறது.

கீழாநெல்லி சாற்றை மஞ்சளுடன் சேர்த்து கலந்து போடும்போது சொரியாசிஸ் சரியாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்