கிர்ணி பழத்தின் மருத்துவ குணங்கள்..,

Default Image
வெயில்காலங்களில் நாம் நம் உடலில் உள்ள கலோரிகளை எளிதில் இழந்துவிடுகிறோம்.இதனை சரி செய்ய குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பழசாறு மற்றும் இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை அருந்திகிறோம். வெயில் காலங்களில் உடலில் உள்ள நீர் சத்தும் எளிதில் குறையும்.Image result for கிர்ணி பழ
அவ்வாறு உடலின் நீர்ச்சத்து இழக்கப் படுகிறபோது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம். அதை ஈடுகட்ட பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணி, கிர்ணி, திராட்சை, இளநீர் போன்றவற்றில் சோடியம், பொட்டாசியம், தண்ணீர் என மூன்றுமே இருப்பதால் அவற்றை அதிகளவில்  எடுத்துக் கொள்ளலாம்.
Related imageசிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி. முகம் டல்லடிக்கும், அவர்கள் கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து, முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
Related image
பசியின்மை, எடை குறைவு, மலச்சிக்கல், சிறுநீர் பாதைக் கோளாறு, அமிலத் தன்மை, அல்சர் ஆகிய அனைத்துக்கும் நல்லது. பசியின்மையை சரி செய்து, களைப்பை நீக்கி, வாதத்தையும் பித்தத்தையும் குறைக்கும். வேறு எந்தப் பழமும் இதைப் போல வேகமாக உடல் சூட்டைத் தணிப்பதில்லை.
உடல் சூட்டினால் கண் எரிச்சல், கண் நோய் ஏற்படலாம். இதற்கு தினமும் இரண்டு கிர்ணிப்பழ துண்டுகளை சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள். கண்கள்  பிரகாசிக்கும். ஒரு கப் கிர்ணி பழத்தில் உள்ள கலோரி 54.6 வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம் மூன்றும் இதில் அதிகமுண்டு.
கிர்ணிப்பழ விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், எரிச்சல், குடல் நோய் குணமாகும். கிர்ணி விதை பவுடரை தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். கிர்ணி பழத்திலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக கிடைகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்