கிருஷ்ண ஜெயந்தியில்'கிருஷ்ணனு'க்கு இதை செய்தால்..!!போதும் எண்ணியவை ஈடேறும்..!!
கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணனை எண்ணியிருந்தால் எண்ணிலடங்க பலன் கிட்டும் ஆம் அந்த குழல் ஊதும் கண்ணனை காலையில் எழுந்த உடன் நீராடி பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் கிருஷ்ணர் படத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்திக்கு பச்சரிசி மாவில் கிருஷ்ணர் கால் போடணும். வாசல் கோலத்திலிருந்து பூஜை அறையில் சுவாமி படம் வரை போட வேண்டும். பிறகு தெரிந்த ஸ்லோகம் அல்லது, கிருஷ்ணா அஷ்டகம் சொல்லலாம். பண்டிகை மாலையில் தான் செய்ய வேண்டும். காலைலிருந்து ஏதும் சாப்பிடாமல் விரதம் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் காஃபி, ஜூஸ் என நீர் ஆகாரம் சாப்பிடவும்.
நைவேத்யங்களை படைத்து தீப ஆரத்தி காட்டி வழிபட வேண்டும். ஆரத்தி காட்டிய பின்னர் நைவேத்திய பொருட்களை குழந்தைகளுக்கு தர வேண்டும்.அதன் பின்னரே நாம் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு விரதம் இருப்பதால் எண்ணடற்ற பலன்களை வழங்குவார் அந்த வாமன சொரூபம்..!கண்டிப்பாக நினைத்தது நிறைவேறும்..