கிருஷ்ண ஜெயந்திக்கு நெய்வேத்தியம் ரெடி..!செய்து வணங்க நீங்க ரெடியா..?
கிருஷ்ண ஜெயந்தி என்றாலே நிச்சயம் இடம்பெறும் பலகாரம் சீடை , முறுக்கு,சர்க்கரை பொங்கல்,தயிர்,வெண்ணெய்,பால் போன்றவை வைத்து கிருஷ்ண ஜெயந்தியில் கிருஷ்ணரை வழங்குகிறார்.பலகாரம் மீது பற்று கொண்ட கண்ணபிரான் கருணை உள்ளத்தோடு காப்பவர்.இனி நெய்வேத்தியமாக என்ன படைக்கலாம் என்று பார்ப்போம்.
உப்பு சீடை :
தேவையானவை….!
பச்சரிசி – 250 கிராம்
வெல்லம் – 200 கிராம்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
கொப்பரைத் தேங்காய்த் துருவல் – ஒரு கப்
வறுத்து, அரைத்த உளுத்த மாவு – ஒரு டேபிள்டீஸ்பூன்
எண்ணெய் – 250 மில்லி
எள் – 2 டீஸ்பூன் (வறுத்துக் கொள்ளவும்)
எப்படி செய்வது….!
அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, வடிகட்டி, உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து சலித்து, மாவு தயாரிக்கவும். வெறும் வாணலியில் மாவைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவு லேசாக சூடு வரும் வரை வறுக்கவும். வெல்லத்தை உடைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். அதை மீண்டும் அடுப்பிலேற்றி, உருட்டு பதம் வந்ததும் (சிறிதளவு எடுத்து தண்ணீரில் விட்டுப் பார்த்தால் லேசாக உருட்ட வரும் பதம்), வெல்லப்பாகுடன் மாவைப் போட்டுக் கிளறி… கொப்பரைத் தேங்காய்த் துருவல், எள், ஏலக்காய்த்தூள், உளுத்தமாவு சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருட்டிய வெல்ல சீடைகளைப் போட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.
அவல் முறுக்கு….!
தேவையானவை….!
மாவாக பொடித்த அவல் – 2 கப்,
பயத்த மாவு சலித்தது – ½ கப்,
பொட்டுக்கடலை மாவு – ½ கப்,
சீரகம் – 1 டீஸ்பூன், சுத்தமான எள் – 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்,
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.
எப்படி செய்வது…!
எல்லா மாவையும் சலித்துக் கொண்டு தேவையான தண்ணீர், வெண்ணெய் மற்றும் எள், சீரகம், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முறுக்கு அச்சில் பிழிந்து பொரித்தெடுத்து வடித்து பரிமாறவும். இந்த அவல் முறுக்கு கரகரப்பாக இருக்கும்.ரெடியான பலகாரத்தை கிருஷ்ணனுக்கு வைத்து வழிபடுவோம்.
DINASUVADU