கியூபா நாட்டுக்கான இந்திய தூதராக மது சேத்தி நியமனம்..!
கியூபா நாட்டுக்கான இந்திய தூதராக லண்டன் தூதரகத்தில் பணியாற்றிவரும் மது சேத்தி என்பவரை வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று நியமனம் செய்துள்ளது.
பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள இந்திய தலைமை தூதரகத்தில் ஆலோசகராக பணியாற்றி வருபவர் மது சேத்தி. கடந்த 2004-ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை தொடர்பான பட்டப்படிப்பை (IFS) முடித்துள்ள இவரை கியூபா நாட்டுக்கான இந்திய தூதராக மத்திய வெளியுறவுத்துறை இன்று நியமனம் செய்துள்ளது.
கியூபா நாட்டுக்கான புதிய இந்திய தூதராக மது சேத்தி விரைவில் பொறுப்பேற்று கொள்வார் என டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.