கிம் ஜோங்குடன் நேருக்கு நேர் மோதி பேச நான் தயார் – டிரம்ப்
வட கொரிய அதிபர் கிம் ஜோங் செய்தியாளர்களிடம் பேசுகையில், அணு குண்டு தாங்கிய ஏவுகணையை செலுத்தும் கருவியின் பட்டன், எப்போதும் என் மேஜையில் தயார் நிலையில் உள்ளது என்றார். இதற்கு பதிலடியாக அணு குண்டு தாங்கிய ஏவுகணை பட்டன் என்னிடமும் உள்ளது. அது மிகவும் சக்தி வாய்ந்தது என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.இந்நிலையில் வாஷிங்டனில் அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் பேசியது, வடகொரியா அதிபருடன் நிபந்தனையுடன் பேச்சு நடத்த தயார், அதில் எனக்கு பிரச்னை இல்லை. பேச்சுவார்த்தையில் எனக்கு நம்பிக்கை உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வடகொரியா-தென்கொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.