காலை உணவை மக்காச்சோள ரொட்டியுடன் ஜமாய்த்திடுங்க…!!!

Default Image

ரொட்டி என்றால் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். ரொட்டி என்றால் உயிரையே கொடுக்கும் மக்களும் இருக்கிறார்கள். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரொட்டியை விரும்பி சாப்பிடுபவர்களும் உண்டு. ரொட்டியில் பல வகையான ரொட்டி உள்ளது.

மைதா, கோதுமை, அரிசி மாவு என பல வகையான மாவுகளில் ரொட்டி சுடலாம். இப்பொது நாம் மக்காச்சோள ரொட்டி செய்வது எப்படி என்று பாப்போம்.

தேவையான பொருட்கள் :

  • மக்காச்சோள மாவு – 1 கப்
  • மைதா மாவு – கால் கப்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவைக்கேற்ப

Image result for மக்காச்சோள ரொட்டி

செய்முறை:

மக்காச்சோள மாவு, மைதா மாவை ஒன்றாக கலக்க வேண்டும். உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். அதிக நேரம் ஊற வைக்க தேவையில்லை.

பிசைந்த மாவிலிருந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் போட்டு ரொட்டிகளாக தேய்த்து கொள்ள வேண்டும். சூடான தோசை கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு சுட்டு எடுக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்