காலையில் செய்யக் கூடிய எளிமையான…. ருசியான…. வித்தியாசமான….. சிற்றுண்டி…..!!!!
தோசையை சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தோசையை பல விதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தோசை மிக விரைவாக எளிதாக செய்யக்கூடிய ஒரு சாப்பாடு. இது எளிதாக எளிமையாக செய்தாலும், ருசியாக செய்யலாம். இப்பொது நாம் சோயாபீன்ஸ் தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- சோயாபீன்ஸ் – 2 கப்
- புழுங்கல் அரிசி – 2 கப்
- வெந்தயம் – 2டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
சோயாபீன்ஸ் தோசை செய்வதற்கு முன் சோயாபீன்ஸை 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஊறிய உடன் சோயாபீண்டை அரைக்க வேண்டும். பிறகு அரிசி வெந்தயம் இரண்டையும் போட்டு கலந்து ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து ஒரு இரவு முழுவதும் புளிக்க வைக்க வேண்டும். பிறகு சூடான தோசைக்கு கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை விட்டு தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்க வேண்டும். இப்பொது சுவையான சோயாபீன்ஸ் தோசை ரெடி.