காந்தியடிகள் பற்றி உங்களுக்கு தெரியாத 10 விஷயங்கள்!
அகிம்சை வழியில் ஆங்கிலேயரிடம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த பாரதபிதா மகாத்மா காந்தி பற்றி, நாம் எல்லோருமே அறிந்திருப்போம். அவர் குறித்து நாம் அறிந்திருக்காக 10 விஷயங்களை இங்கு காண்போம்.
1.காந்தியடிகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கான கோரிக்கை ஐந்து முறை வைக்கப்பட்டது. ஐந்து முறையும் அந்த குழுவினரால் அவருக்கு மறுக்கப்பட்டது.
2.4 கண்டங்கள் மற்றும் 12 நாடுகளில் மனித உரிமை இயக்கத்தின் பொறுப்பாளராக காந்திஜி இருந்துள்ளார்.
3.காந்தியடிகள் இறந்த பிறகு அவருடைய இறுதி ஊர்வலம் 8 கி.மி தொலைவிற்கு இருந்தது.
4.காந்தியடிகள் இறந்த பிறகு 21 வருடங்கள் கழித்து அவரது தபால் தலை வெளியிட்டுள்ளது இங்கிலாந்து அரசு.
5.காந்தியடிகள் நடப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஒரு நாளைக்கு 18 கிமி நடக்கும் பழக்கம் உடையவர். அவர் படந்த தூரத்தில், உலகத்தை இரண்டு முறை சுற்றி வந்திருக்கலாம்.
6.எப்போதும் அகிம்சையை கடைபிடித்த அவர் ஒரு முறை போரிலும் பங்குபெற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவில் இருந்த போது நடைபெற்ற போயர் போரின் போது அங்கு நடந்த மனித உயிர் சிதைவுகளை பார்த்த பின்னர் அகிம்சைக்கு திரும்பினார் காந்தி.
7.லியோ டால்ஸ்டாய் , ஐன்ஸ்டின், ஹிட்லர் போன்ற உலகப்புகழ் பெற்றவர்களிடம் காந்திக்கு கடித தொடர்பு இருந்துள்ளது.
8.இந்தியா சுதந்திரம் அடைந்த உடன் நேரு நடத்திய முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இது அப்போது பெரும் சர்சையாகியது.
9.மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தில் காந்தியடிகள் கடைசியாக உபயோகித்த கைக்குடை , கடிகாரம் உள்ளிட்ட பல பொருட்கள் உள்ளன.
10.காந்தியடிகள் இறப்பதற்கு முன்னர் காங்கிரசை கலைத்துவிட வேண்டும் என நினைத்துள்ளார். இதனை தனக்கு நெருக்கமானவர்ககளிடம் கூறியுள்ளார்.
11.காந்தியடிகள் ஒரு போலி பல் செட் உபயோகித்தார். எப்போதும் அவரது மடியில் ஒரு பல் செட் இருக்கும்.