காதலிக்காக விஷப்பாம்பை கடிக்க வைத்து உயிரை விட்ட காதலன்..!
ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெக்கைச் சேர்ந்த அர்ஸன் வலேவ்-எக்டேரினா கேத்யா இருவரும் பாம்பு மற்றும் பூனைகள் குறித்த காணொளிகளை வெளியிடும் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். சுமார் 4,00,000 க்கும் மேல் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டுள்ளதால், இவர்களின் சேனல் ரஷ்யா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரபலம்.
அர்ஸன் உயிரியல் பூங்காவில் பணியாற்றியவர் என்பதால், விலங்குகள் குறித்த அனுபவம் அவருக்கு உண்டு. இதன் காரணமாகவே அதிகமாக பாம்புகள் குறித்த வீடியோவை தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்துள்ளார். அதில் உலகின் கொடிய விஷம் கொண்ட பிளாக் மாம்பா என்கிற பாம்பை வைத்துப் பல வீடியோக்களையும் வெளியிட்டிருக்கிறார்.
இந்த ஜோடியின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த போது, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜுலை மாதம் திடீரென்று இருவருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியான எக்டேரினா கட்யாவை அவர் பொது இடத்தில் வைத்து அடித்துள்ளார். ஆத்திரமடைந்த அவர் இவரை விட்டு தனியாக சென்று ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி வேறு ஒருவருடன் வாழவும் ஆரம்பித்துள்ளார். மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் இருந்த அர்ஸன் வலேவுக்கு அவர் வேறொருவருடன் சேர்ந்து வாழ்கிறார் என்ற விசயம் தெரிந்தவுடன் மிகவும் வேதனையடைந்துள்ளார். கடும் விரக்தியில் இருந்த அவர் திடீரென்று அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி தன்னுடைய யூடியூப் சேனலில், நேரலையாக வந்து, தன்னுடைய பார்வையார்களிடம் பேச ஆரம்பிக்கிறார்.
அப்போது இன்று என்னுடைய வாழ்வின் மிகவும் முக்கியமான நாள், என்று கூறிக் கொண்டு கேமராவை விட்டு வெளியே செல்கிறார். அப்போது ஏதோ ஒரு சத்தம் கேட்கிறது. அதன் பின் கேமரா முன் வந்த அவர் நான் கேத்யாவை மிகவும் விரும்புகிறேன், கடைசி நேரத்தில் அவளுடன் இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி தன்னுடைய கையை காட்டுகிறார். கையில் ரத்தம் கொட்டுகிறது. அதன் பின் தான் தெரிகிறது, அவர் தான் வீட்டில் பிளாக் மாம்போ பாம்பை தன்னுடைய கைகளில் கடிக்கும்படி வைத்திருக்கிறார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர், கேமராவில் கேத்யா எண்ணை காண்பித்து இதைப் பற்றி அவளிடம் சொல்லிவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதைக் கண்ட பார்வையாளர் ஒருவர் உடனடியாக ஆம்புலன்சிற்கு தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இது குறித்து அப்போதைய காலக்கட்டத்தில் கேத்யிடம் பேசிய போது அவர் எதுவும் கூறவில்லை எனவும், அதன் பின் சில நாட்கள் சென்ற பின்பு, எங்கள் இருவருக்கும் விவாகரத்து நடக்கவில்லை, நாங்கள் பிரிந்திருந்தோம், இப்போது வரை நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். உலகத்திலுள்ள அபாயகரமான பாம்புகளின் பட்டியலில் பிளாக் மாம்போ பாம்பு முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.