காதலனுக்காக காதலுக்காக இளவரசி பட்டத்தை தூக்கி எரிந்த பெண் …!!!இது காதல் செய்த ஜலம்..!!
காதலுக்காக இளவரசி பட்டத்தைத் தூக்கி எரிந்து விட்டு சாமானிய காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.ஜப்பான் நாட்டு இளவரசி அயாகோ.
ஜப்பான் நாட்டின் மன்னர் ஹிஸாக்கோவின் மகள் 28 வயதான அயாகோ ஆவர்.கடந்த 2013-ம் ஆண்டு டோக்கியோ பல்கலைகழகத்தில் படித்தபோது அயாகோவிற்கும் அங்கு சட்ட ஆலோசகராகப் பணியாற்றிய கெய் மோரியாவுக்குமிடையே காதல் துளிர் விட்டு மலர்ந்தது.இதில் அந்நாட்டின் ஆச்சரியம் இவர்கள் காதலுக்கு இருவரின் வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையி இளவரசி அயாகோ,கெய் மோரியா, திருமணம் முடிவாகி அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது.
திருமண தேதி அறிவிக்கப்பட்ட சில நாள்களில் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இவர்களின் திருமண தேதி மட்டு அறிவிக்கப்படாமலே இருந்தது. இதற்கு என்ன காரணம் என்றால் அந்நாட்டின் சட்டம்தான் இவர்களது திருமணத்துக்குத் தடையாக இருந்தாம். ஜப்பான் நாட்டின் சட்டத் திட்டத்தைப் பொறுத்தவரை, அரசர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்கள் சாமானியர்களை திருமணம் செய்வதால் அவர்கள் அரசர் குடும்பத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதே இந்த திருமணத் தடைக்கு காரணமாக இருந்தது.
இந்தச் சட்டச் சிக்கலில் தவித்துக்கொண்டிருந்த இளவரசி அயாகோ தன் காதலுக்காக துணிச்சலான முடிவொன்றை எடுத்தார்.அது என்னவென்றால் தன் காதலுக்காக இளவரசி பட்டத்தைத் துறப்பதே என்று முடிவெடுத்து அதற்கான தன்னுடைய கருத்தை முன்வந்தார். அதன்படி தனது இளவரசி பட்டத்தை தூக்கி எரிந்து விட்டு சாமானிய காதலரான கெய் மோரியாவை, கரம்பற்றி கொண்டார் .கெய் மோரியா 32 வயதான இவர் தற்போது சரக்குப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசி அயாகோ குறித்து கெய் மோரியா அவளை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்.என்றும் நாங்கள் மகிழ்வான வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறோம்” என்று கூற மறுபக்கம் அயாகோ நான் மிகவும் பாக்கியசாலி மற்றும் நான் என் முடிவில் எப்போதும் உறுதியாக இருப்பேன் என்று தன் காதலை வெளிபடுத்த கூறினார்.
DINASUVADU