கஸ்டமருக்குக்கான உணவை ருசி பார்த்த ஊழியர்.. சிசிடிவி-யில் சிக்கினார்!
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட உணவை, கஸ்டமருக்கு டெலிவரி செய்ய வந்தவர், அதை யாருக்கும் தெரியாமல் ருசிப் பார்த்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய நவீன உலகில் ஆன்லைனில் ஃபுட ஆர்டர் செய்வது ஒரு நோய் போல் பரவி வருகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் டெலிவரி பாய்ஸ் இருசக்கர வாகனத்தில் சுற்றி சுற்றி கஸ்டமர்களுக்கு டெலிவரி செய்து வருகின்றன. நேரத்திற்கு விரைவாக டெலிவரி செய்ய வேண்டும் என்ற நோக்கி அவர்கள் இருசக்கர வாகனத்தில் பறந்து செல்வதை அனைவரும் கவனித்துள்ளோம்.
உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் பலரும் பணிபுரிகின்றனர். இவை ஏஜென்சி போல் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் உணவை ஆர்டர் செய்த பிறகு, குறிப்பிட்ட அந்த உணவகத்திற்குச் சென்று அந்த உணவை வாங்கிக் கொண்டு வந்து வாடிக்கையாளரிடம் உரிய நேரத்தில் டெலிவரி செய்து வருகின்றன.
இதில், எந்த முறைகேடும் ஏற்படாது என்று வாடிக்கையாளர்கள் நம்புவது வழக்கம். ஆனால் உணவு டெலிவரி செய்யும் ஊழியரை ஆசையில் அந்த உணவை ருசிப்பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்டர் செய்த உணவை எடுத்துக் கொண்டு டெலிவரி செய்யும் போது அவரது வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டு ஆசையாக அவர் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
DINASUVADU