கஷோகி படுகொலை…..பட்டத்து அரசுக்கு தொடர்பு..!கஷோகி கதறும் ஆடியோ வெளியாகி பரபரப்பு..!!
கஷோகி யார் இந்த கஷோகி என்றால் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் தான் ஜமால் கஷோகி அங்கும் கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த பரிசு படுகொலை ஆம் பத்திரிக்கையாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் பட்டத்து அரசுக்கு இந்த படுகொலையில் நேரடி தொடர்பு உள்ளதாக ஊடகங்களும், அமெரிக்காவின் ரசிகய உளவு படையும் தொடர்ந்து கூறி வரும் நிலையில் கஷோகி படுகொலை செய்யப்பட்ட அன்றைய தினத்தில் அவர் தன் வாழ்வில் இறுதியாக உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது அவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஷோகி கடந்த அக்டோபர் 2 தேதி சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கி நாட்டில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.இது படுஒலை என்று துருக்கி உளவுத்துறை படுகொலை தொடர்புடைய ஒரு ஆடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. இதனை மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்த பதிவில் கஷோகி தன் உயிர் பிரிய கூடிய கடைசி நேரத்தில் புலம்பும் வேதனை பதிவாகி உள்ளது. அதில் கஷோகி, “என்னால மூச்சுவிட முடியல” எனத் தொடச்சியாக புலம்பும் வேதனை அடங்கிய குரலானது அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.
கஷோகி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டது எப்படி என்பது மட்டுமல்லாமல் அதை செய்த சவுதியைச் சேர்ந்த சிலர் கஷோகியை படுகொலை செய்யும் வீடியோ பதிவுகள் துருக்கியிடம் உள்ளது. இந்த பதிவை வைத்து படுகொலைக்கு காரணமானவர்களை நாடு கடத்த சவுதியிடம் துருக்கி கோரிக்கை வைத்த போது அது அதனை சவுதி மறுத்துவிட்டது.இந்த கொலையில் சவுதி பட்டத்து இளவரசர் ஆணைப்படி நடந்ததாக அமெரிக்க சிஐஏ ஆய்வு கூறுயது குறிப்பிடத்தக்கது.