கள்ளக்காதல் சரியா ? தவறா ?
அது என்ன காதல் என்றாலே தவறு என்று சில பேர் சொல்கிறார்கள். இதுல் கள்ளக்காதல் மட்டும் எந்த வகை? நாடு முழுவதும் ரகசியமாய் நடந்து கொண்டு இருக்கும், இதுவும் ஒரு சமூகப் பிரச்சினைதான். இந்தக் கலாச்சாரம் இன்று புதிதாய் ஆரம்பிக்கவில்லை, பாட்டன் காலத்தில் இருந்து ரகசிய உறவுகள் இருந்து வருகிறது.
ஒரு ஆண் அல்லது பெண் திருமணத்திற்கு முன் காதலித்தவர்களை கைப் பிடிக்க முடியாமல் மற்றொருவரைப் கரம் பிடித்து வாழ ஆரம்பிக்கின்றனர். அவ்வாறு ஆரம்பிக்கும் வாழ்க்கை சிலமாதங்களிலே கசந்து விடுகிறது. மேலும் தனது பழைய காதலை மறக்க முடியாமல் திருமண வாழ்க்கையை வெறுத்து, மீண்டும் அவர்களை மனம் தேடிச் செல்கிறது. மீண்டும் அவர்களுடன் உறவை வைத்து கொள்கிறர்கள் சிலர். மீண்டும் அந்தக் காதல் பூப்பூக்கின்றது.
திருமணம் முடிந்த பிறகு இது போன்ற உறவுகள் மிகவும் தவறானது. ஆம், வீட்டில் உள்ள துணை மற்றும் குழந்தைகள், அவர்கள் எதிர்காலம் இதனால் பெரிதும் பாதிப்படைகிறது. நீங்கள் வைத்துக் கொள்ளும் இந்தத் தவறான உறவால் அவர்கள் இந்தச் சமுகத்தை எதிர்கொள்ளும் போது மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் நாட்டில் வன்முறைகளும் அதிகரித்து வருகிறது, இது போலப் பிரிந்த குடும்பங்கள் 70 சதவிதம் பேர் அனாதையாக நாட்டில் இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
DINASUVADU