தெற்கு உகாண்டாவின் காயுங்கா என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது முதும்பா. முதும்பா ஒரு இஸ்லாமிய மதபோதகராக தற்போது வரை இருந்துவருகிறார்.தினமும் மசூதிக்கு செல்லும் வேளையில் ஸ்வபுல்லா நபுகீரா என்பவரை அடிக்கடி சந்தித்து நட்பாகி பின்பு அது இருவரும் இடையே காதலாக மலர்ந்து உள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இஸ்லாமிய முறைப்படி திருமணமும் செய்து கொண்டு உள்ளனர்.
இவ்வாறு திருமணம் அதுவும் காதலித்த பெண்ணுடன் நிகழ்ந்தது என்ற சந்தோசத்தில் இருந்தவற்கு காத்திருந்தது அதிர்ச்சி முகமதுவின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள், ‘முகமதுவின் மனைவி வீட்டிலிருந்து டி.வி மற்றும் துணிகளை திருடிக் கொண்டு சுவர் ஏறிக் குதித்து ஓடியதை பார்த்ததாக அவரிடம் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினரின் புகாரை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் விசாரணையைத் தொடக்கினர்.விசாரணை குறித்து காவலர் ஒருவர் தெரிவிக்கையில் திருடி சுவர் ஏறி குதித்து ஓடிய நபுகீராவை பிடித்து காவல்நிலையத்துக்குக் அழைத்து வந்தோம் வரும் போது ஹிஜாப் அணிந்திருந்தார். இந்நாட்டுச் சட்டப்படி பெண் காவலர் ஒருவர் அவரின் ஆடையைக் களைந்து சோதனை நடத்தினார்,அப்போது பெண் போலீசார் கூச்சலிடவே நாங்கள் சென்று பார்த்த போது மேல்உள்ளாடையின் உள்ளே துணிகளை வைத்து மார்பு போல செய்து உள்ளார் அதப் பின் கீழ் பகுதியில் ஆடையைக் களைந்து சோதனை செய்யும் போது அவருக்கு ஆண் உறுப்பு இருப்பது தெரியவந்தது’என்று தெரிவித்தார்.
காவல்துறை விசாரணையில் நபுகீரா என்ற பெண்ணாக நடித்த ஆணின் பெயர் ரிச்சர்ட் துமுஷாபே என்பது விசாரணையில் தெரியவந்தது. பணத்துக்காக பெண் வேடமிட்டதாக ரிச்சர்ட் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து ஆண் ஒருவரை பெண் என கருதி மணந்த இஸ்லாமிய மதபோதகர் முகமது தெரிவிக்கையில் திருமணமான பிறகு இரண்டு வாரம் வரையிலும் நாங்கள் முழுமையான கணவன் மனைவியாக இல்லை. அந்த சமயத்தில் அவருக்கு மாதவிடாய் காலம் என்று கூறியிருந்தால் நான் காத்துக் கொண்டிருந்தேன் என்று விளக்கமளித்த உள்ளார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பேசு பொருளாகி உள்ளதோடு பணத்திற்காக இவ்வாறு ஒரு சம்பவம் நடந்தை எண்ணி வருத்தம் கொள்ளும் அதே வேளையில் சிலர் நகைக்கவும் செய்கின்றனர்.
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…