கலவர களமான பிரான்ஸ்..அவசர நிலை பிரகடனம்..!!போராட்டம் எதிரொலியாக பணிந்த அரசு 6 மாதங்களுக்கு வரிகள் ரத்து..!!
மக்கள் போராட்டம் அதிதீவிரமாக மாறி கலவரமாக வெடித்தது.இதனால் அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த போராட்டம் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியவாசிய பொருட்களின் மீதான கூடுதல் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியை அந்நாட்டு அரசு உயர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து கடந்த சில வாரங்களாக அங்கு கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற வேளையில் இந்த போராட்டத்திற்கு #YELLOWJACKETS என்று அழைக்கப்பட்டது.இந்த மஞ்சள் நிற உடை அணிந்த மக்கள் போராட்டக்காரர்களாக மாறி பாரிஸ் நகரம் உள்ளிட்ட 1600 இடங்களில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்ஸ் இதை கண்டு அதிர்ந்தது.
இந்நிலையில் போராட்டம் மெல்ல கலவரமாக மாற தொடங்கியது அப்படி கடந்த ஞாயிறு கிழமை அன்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்களுக்கும்,போலீசாருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது.இதில் இருவருமே படுகாயம் அடைந்தனர்.இந்த போராட்டத்தால் பதற்ற நிலை உருவாகியதை அடுத்து அவசர நிலை பிரகடனம் தொடர்பான அலோசனை நடத்தப்பட்ட நிலையில் அரசு வரியை ரத்து செய்ய பிரான்ஸ் அரசு தற்போது முன்வந்துள்ளது. இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் எட்வர்ட் பிலிப் பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் வரி தொடர்ந்து 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக கூறினார்.