கரும்பு தின்றதும் தண்ணீர் அருந்த கூடாது ஏன் தெரியுமா?
பொங்கல் பண்டிகை முடிந்து மறுநாள் தங்கள் குழந்தைகளின் வாய் வெந்திருப்பதைக் கண்டு பதறி,டாக்டரிடம் அழைத்துச் செல்லும் பெற்றோர்களை மாநகரங்களிலும் சிறு நகரங்களிலும் பார்க்கலாம்.
காரணம்,அந்தப் பிள்ளைகள் கரும்புத் தின்ற உடனேயே தண்ணீர் குடித்திருப்பார்கள். அதன்காரணமாக,வாய் முழுக்க நமைச்சல் எடுக்கும் சிறு கொப்புளங்கள் தோன்றியிருக்கும்.எனவே எப்போதும் கரும்பு தின்ற 15 நிமிடம் கழித்த பின்னர் தண்ணீர் அருந்தினால் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
வாயில் கொப்பளங்கள் ஏற்பட காரணம்:
“கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படக்கூடிய கால்சியம் அதிகம் இருக்கிறது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது. அந்த சமயத்தில்,தண்ணீர் குடிக்கும்போது அதிகமான சூட்டைக் கிளப்பும் எதிர்வினை நடக்கிறது.இதனால்,நாக்கு வெந்து வாயில் கொப்பளங்கள் ஏற்படுகிறது.
கொஞ்சம் இடைவெளிவிட்டு தண்ணீர் அருந்துவதால் இந்த பாதிப்பு வருவதில்லை”என்கிறார்கள் மருத்துவர்கள்.