கரிசலாங்கண்ணி இலையின் நன்மை பயக்கும் குணநலன்கள்….!!!
கரிசலாங்கண்ணி செடியில் மஞ்சள் மற்றும் வெள்ளை பூ பூக்கிறது. அதில் மஞ்சள் பூ மஞ்சள் காமாலைக்கு, வெள்ளைப்பூ ஊதுகாமாலைக்கும் நல்ல குணத்தை தருகின்றன. இது கற்பக மூலிகை ஆகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் இது கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறு நீரகம் ஆகியவற்றை தூய்மை செய்கிறது.
கரிசலாங்கண்ணி கீரையாக சமைத்து சாப்பிடலாம். பொரியல், கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்த கெட்ட நீர் வெளியாகும்.
கரிசலாங்கண்ணி இலையினால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் :
- உடல் எடையை குறைக்கிறது.
- மஞ்சள் காமாலை குணமாகும்.
- இரத்தசோகையை குணப்படுத்துகிறது.
- ஆஸ்துமா,சளி, இருமல், குரல் கம்மல் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
- கண்ணுக்கு ஒளிகொடுக்கும்.
- குழந்தைக்கு இருமல் இருந்தால் இதன் சாறு பத்துச் சொட்டு மற்றும் தேன் பத்து துளி கலந்து வெந்நீரில் கொடுக்க குழந்தையின் இருமல், சளி நீங்கும்.
- கூந்தல் வளர்வதற்கு உதவுகிறது.