கரப்பான் பூச்சியின் பால் தான் வருங்காலத்தில் புதிய சூப்பர் ஃபுட் !!
கரப்பான் பூச்சியின் பால் தான் வருங்காலத்தில் புதிய சூப்பர் ஃபுட் மற்றும் பால் பொருட்களின் மாற்றாக அமையும் என்று கூறினால் பெரும்பாலான மக்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பார்கள், சிலரோ வாஷ் பேசின் பக்கம் வாந்தியெடுக்க ஓடுவார்கள். இது,உண்ண ஏற்றதா இல்லையா? பொதுவாக பூச்சிகளான வெட்டுக்கிளிகள், புழுக்கள், வண்டுகள், சிலந்திகள், எறும்புகள் மற்றும் கரையான்கள் அவைகளிலுள்ள பிரதான நிலையான புரதத்தின் காரணமாக சாப்பிடப்படுகின்றன.
கரப்பான் பூச்சியின் பால் அல்லது எண்டோ மில்க் ஏற்கனவே பல இடங்களில் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பூச்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உலகெங்கிலும் உள்ள மக்களின் புரோட்டீன் தேவைக்காக நுகரப்படுகிறது.
புரதம் அதிகம் உள்ளது
சில பூச்சிகள் அத்தியாவசிய அமினோ அமிலங்களுடன் 80 சதவிகிதம் புரதங்களைக் கொண்டுள்ளன. இது மற்ற விலங்கு ப்ரோட்டீன்களை விட மிக அதிகம்.
பசுவின் பாலைவிட நான்கு மடங்கு புரதத்தைக் கொண்டுள்ளது
பெண் பசுபிக் பீட்டில் காக்ரோச் அடர்த்தியான புரோட்டீன்- திரவத்தை உற்பத்தி செய்கிறது. இந்த பூச்சிகள் முட்டைகளை இடுவதில்லை பதிலாக இளம் குட்டிகளை ஈனுகின்றன. கருமுட்டைகள் உள்ளே வளர ஆரம்பித்தவுடன், பெண் கரப்பான் பூச்சி, தனது அடையிலிருந்து ஒரு மஞ்சள் நிற திரவப் பாலைக் கொடுக்கிறது. இந்தப் பால் மிகவும் உயர்ந்த சத்துள்ளது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மேலும், கரப்பான் பூச்சியின் பாலானது பூமியில் மிகவும் சத்தான மற்றும் உயர் கலோரிகள் கொண்ட ஒரு உணவாகும். பசுவின் பாலைவிட நான்கு மடங்கு புரதத்தைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.