கமலாயத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு..! அன்புமணி ராமதாஸ் அஞ்சலி..!
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.மேலும் பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் ஆங்காங்கே அஸ்திக்கு அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு என்றும் தெரிவித்தார்.
பின்னர் ஒவ்வொரு மாநில தலைவருக்கும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை வழங்கினார்கள்.அதன்படி அவரது அஸ்தி தமிழகம் வந்தடைந்தது.
சென்னை கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு அன்புமணி ராமதாஸ் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.அரசியல் தலைவர்கள் வாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU