கபடி விளையாடிய உலக கோப்பை தொடருக்கு தயாராகும் இங்கிலாந்து கால்பந்து வீரர்கள்

Default Image
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வரும் (ஜூன்) 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டித்தொடரில்,  ரஷியா, பிரேசில், ஈரான், ஜப்பான், மெக்சிகோ, பெல்ஜியம், தென்கொரியா, சவூதி அரேபியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நைஜீரியா, கோஸ்டாரிகா, போலந்து, எகிப்து, ஐஸ்லாந்து, செர்பியா, போர்ச்சுகல், பிரான்ஸ், உருகுவே, அர்ஜென்டினா, கொலம்பியா, பனாமா, செனகல், மொராக்கோ, துனிசியா, சுவிட்சர்லாந்து, குரோஷியா, சுவீடன், டென்மார்க், ஆஸ்திரேலியா, பெரு ஆகிய 32 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கால்பந்து போட்டித்தொடரை காண உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். à®•à®ªà®Ÿà®¿ விளையாடி உலக கோப்பை தொடருக்கு தயாராகும் இங்கிலாந்து கால்பந்து வீரர்கள்
பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் ரஷ்யாவில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அந்த வகையில், இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். பயிற்சியின் போது, வேறு விளையாட்டுகளையும் தங்களுக்குள் விளையாடி மனச்சோர்வை போக்குவது விளையாட்டு வீரர்களுக்கு வழக்கமாகும்.
அதன்படி,  இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரங்கள் தேர்ந்தெடுத்த விளையாட்டு என்னவென்றால் கபடி ஆகும்.  கபடி போட்டியை இங்கிலாந்து நட்சத்திர வீரர்கள் ஹரி கனே, டன்னி வெல்பெக், கேரி சகில், ஜெஸ்ஸி லின்கார்டு உள்ளிட்ட வீரர்கள் கலகலப்பாக கபடி விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்