கதி கலங்கும் அதிமுக…219ஆம் நம்பர் ரூம்…அமைச்சரின் வீடியோ….TTV தரப்பினர் கையில்..
இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக அமைச்சர் ஜெயக்குமார் மீது புகாரை தொடர்ந்து தற்போது அவர் அந்த பெண்ணுடன் இருந்த முழு ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் எழுந்துள்ளது. இதில் கர்ப்பமான அந்த பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பிறப்பு சான்றிதழில் ஜெயக்குமார் என்ற பெயரும், அவரது சென்னை முகவரியும் இடம் ெபற்றுள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கடந்த 2016ல் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதி பொறுப்பாளராக அப்போது அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இவருக்கு கீழ் 10 அமைச்சர்கள் தேர்தல் பணி ஆற்றினர். இதில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அந்த மூத்த அமைச்சரும் ஆவார். இவருக்கு அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதற்காக, மூத்த அமைச்சர் சென்னையில் இருந்து தனது ஆதரவாளர்களை அழைத்து வந்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். ஆதரவாளர்கள் அந்த பகுதியிலேயே உள்ள ஒரு வீட்டில் தங்கினர். அமைச்சர் மட்டும் தொகுதிக்கு அருகில் உள்ள திண்டுக்கல்லில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த ஓட்டலில் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணும் 2 நாள் அமைச்சருடன் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து மாநில உளவுத்துறை போலீசார் அரவக்குறிச்சி, திண்டுக்கல்லில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தற்ேபாது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அரவக்குறிச்சி பகுதி அரசியல் வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு: திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் தங்கி இருந்தார். அப்போது சம்பந்தப்பட்ட பெண்ணும் 2 நாள் அமைச்சருடன் தங்கி இருந்தது உண்மை.
அந்த பெண் ஓட்டல் அறைக்கு வந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் ஓட்டலில் செலுத்தப்பட்ட பில் ஆகிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அமைச்சர் அரவக்குறிச்சியில் தேர்தல் பணியாற்றிய ேபாது, அவருக்கு ஓட்டல் அறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்த தரப்பினரின் வசம் இந்த ஆதாரங்கள் சிக்கி உள்ளன. இந்த தரப்பினர் தற்போது அமைச்சருக்கு எதிர் அணியில் உள்ளவர்கள். எனவே எந்த நேரத்திலும் இந்த ஆதாரங்கள் வௌியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வெளியானால் அமைச்சர் தப்பிக்கவே முடியாது. சிக்கலில் மாட்டிக்கொள்வார். மேலும் சம்பந்தப்பட்ட ெபண்ணும் ஆதாரங்களை திரட்டி வைத்துள்ள தரப்பினரின் பாதுகாப்பிலேயே தற்போது வரை உள்ளார். இதனால் தான் அமைச்சர் தரப்பினர் எவ்வளவோ முயன்றும் அந்த பெண்ணை சந்திக்க முடியவில்லை. சிசிடிவி கேமரா ஆதாரங்கள் வெளியானால், தமிழக அரசியலில் இன்னும் பரபரப்பு அதிகரிக்கும். இவ்வாறு அரசியல் வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
DINASUVADU