'அமைச்சர் பதவி காலி' 'கதிகலங்கும் அதிமுக' "3000 பக்க ஊழல் ஆதாரதுடன் நீதிமன்றத்தில் வழக்கு..!!
சென்னை, அக்.2- தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்கு தொடர உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கோயம்புத்தூரில் மட்டும் பெறப்பட்ட 3000 பக்க ஆதாரங்களுடன் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்ப தாவது:- தமிழக அரசின் உள்ளாட்சித் துறை அமைச்சரான எஸ்.பி. வேலுமணி 2014 மே 19 ஆம் தேதி முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழக அரசு, பொதுப் பணித் துறை, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மற்றும் சென்னை பொலிவுறு நகரத்திட்டம் ஆகிய வற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) வழங்கப்படுவதற்கு சில நாட்கள் முன்பாக, சென்னை, கோவை, சேலம், திருப்பூர் மற்றும் திருச்சி மாநகராட்சிகளில் தன்னுடைய பினாமிகளை இயக்குநர்களாகக் கொண்ட நிறுவனங்களை உருவாக்கி அவற்றுக்கே ஒப்பந்தப் புள்ளிகளை வழங்கியுள்ளார். அவ்வாறு அவர் தனது அமைச்சர் என்ற அந்தஸ்தைப் பயன்படுத்தி தனது பினாமி நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகளைப் பெற்று தனது வருவாய்க்கு மீறி பெருமளவில் சொத்துக்களை குவித்துள்ளார்.
அவ்வாறு அவர் ஒப்பந்தப் புள்ளிகள் பெற்ற பினாமி நிறுவனங்கள் வருமாறு:-
- கே.சி.பி. என்ஜினியர்ஸ் (பி) லிமிடெட்,
- பி.செந்தில் அன்ட்கோ
- வர்தன் இன்ஃபிராஸ்ட் ரக்சர்
- கான்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா
- ஆலயம் பவுண்டேஷன் (பி) லிட்,
- கான்ஸ்ட்ரோமல் குட்ஸ் (பி) லிமிடெட்,
- இன்விக்டா மெடி டெக் லிமிடெட்,
இதில் கே.சி.பி. என்ஜினியர்ஸ் நிறுவனம் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கியவரான கே.சந்திரபிரகாஷ் மற்றும் ராஜன் சந்திரசேகர் ஆகியோரை இயக்குநர்களாக கொண்டது .அதில் ராஜன் சந்திரசேகர் கோவை ரூரல் மாவட்ட அ.தி.மு.க.வின் இளைஞரணியில் பதவியில் உள்ளார். இவர் நமது அம்மா மற்றும் நியூஸ் ஜே. நிறுவனங்கள் நடத்தி வருகிறார். கே.சி.பி. இன்ஜினியர்ஸ் மற்றும் பேப்ரி கேட்டர்ஸ் என்ற நிறுவனத்தில் மொத்த ஒப்பந்தப்புள்ளி வருமானம் 2013-14ல் 17,47,34,098 ஆக இருந்து 2014-15ல் 100 சதவிகிதம் உயர்ந்தும் தற்போது ரூ.498, 42,29,173 ஆக அதிகரித்துள்ளது.
பி.செந்தில் அன்கோ எஸ்.பி. வேலுமணியின் சகோதரர் பி.அன்பரசனின் நிறுவனம். இந்நிறுவனம் கோவை மாநகராட்சியிலிருந்து 2011 முதல் 2015 வரை 15 கோடி மதிப்புள்ள ஒப்பந்தப்புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் பிறகு அதுபற்றிய விபரங்களை மாநகராட்சி வெளியிடவில்லை.
கான்ஸ்ட்ராஸிஸ் இந்திய நிறுவனம் சந்திரபிரகாஸின் உறவினர்களுக்கு சொந்தமானது. இதே முகவரியிலிருந்து தான் வர்தன் இன்ஃபிராஸ்ட் ரக்சர் மற்றும் கான்ஸ்ட் ரோமால் குட்ஸ் (பி)லிட் ஆகிய நிறுவனங் களும் இயங்கி வருகின்றன. இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.86 லட்சத்திலிருந்து 3 ஆண்டு களில் 28 கோடியே 55 லட்சத்து 61 ஆயிரத்து 334 ஆக உயர்ந் துள்ளது. இதன் வருவாய் 2012-13ல் 3,02,61,997லிருந்து 2017க்குள் 147, 34, 46,007 ஆக அதிகரித்துள்ளது.
ஆலயம் பவுண்டேஷன் லிமி டெட் என்றம் சந்திரப்பிரகாஷின் துணை நிறுவனத்திலிருந்து வில கிய போதும் 2017ல் அதன்பங்கு களை ராஜன் சந்திரசேகர் மீண்டும் பெற்றுக் கொண்டார். இதன் வருவாய் 2 ஆண்டு களுக்குள் 3000 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இவை தவிர ராஜன் சந்திர சேகரும் சந்திரப்பிரகாசும், ஆலயம்கோல்டு அன்ட்டயண்ட்ஸ் என்ற நிறுவனத்தையும் 2018ல் தொடங்கியுள்ளார்.
சந்திரசேகர் தம்பியான அன்பரசன் நந்தனத்தில் துவக்கி யுள்ள மகாகணபதி ஜுவல்லர்ஸ் லஞ்சப் பணத்தில் தொடங்கப் பட்ட நிறுவனம் என்று கருதப்படுகிறது. இவ்வாறு பல்வேறு துறை களிலும் அவர்கள் நிறுவனங்களைத் துவக்கியுள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு எந்த முன் அனுபவமும் திறமையும் இல்லாமல் இருந்தும் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுடைய நிறுவனத்தின் பணித் திட்டங்களுக்கு சம்பந்த மில்லாத ஒப்பந்தப் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.பிற ஒப்பந்தப் புள்ளிதாரர்களின் ஒப்பந்தப்புள்ளிகள் தொழில் நுட்ப அடிப்படையில் நிராகரிக்கப் பட்டுள்ளன. பினாமி நிறுவனங் கள் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரிக்கையில் கலந்து கொண் டுள்ளன. இவை அனைத்தையும் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
2012ல் ரூ.942 கோடி உபரி பெற்றிருந்த சென்னை மாநகராட்சி அதன் உபரி குறைந்து ரூ.2500 கோடி கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வி.அன்பழகன் 04.05.2018ல் எஸ்.பி.வேலுமணி மீது புகார் கூறியிருந்தார். ஆனால் அவை துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டதால் அதை அமைச்சர் தமக்குச் சாதகமாக முடக்கிவிட்டார். 10.9.2018ல் பல்வேறு ஆதாரங் களுடன் குற்ற விசாரணையை நடத்தக்கோரி கோவை நகராட்சி யில் புகார் செய்தேன்.
முறைகேடான நடவடிக்கை கள் மூலம் தனது உறவினர்கள், ஆட்சியாளர் முறைகேடாக சொத்து சேர்க்க உதவி செய்துள்ளார். தன்னுடைய ஒப்பந்ததாரர் களுக்கு பணம் வழங்குவதற்காக மாநகராட்சியின் பல்வேறு துறை ஒதுக்கீடுகளையும் முறைகேடாக மாற்றம் செய்துள்ளார். இதனால் கோவை மாநகராட்சியில் 2015 – 2016 இல் இருந்த வங்கி இருப்பு 72.51 கோடியிலிருந்து 2016 – 2017 இல் 4.91 கோடியாக குறைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இருப்பே இல்லாத நிலை ஏற்பட்டது.இதனால் மாநகராட்சி கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கு கட்டப்படவேண்டிய வட்டி மட்டுமே ரூ.10 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. இதேபோன்று மாநகராட்சியில் நிலையான வைப்புத்தொகைகள் (பிக்சட் டெபாசிட்) முதிர்ச்சி அடையாமல் எடுக்கப்பட்டதால் மாநகராட்சிக்கு ரூ.3, 014, 62, 167 இழப்பு ஏற்பட்டது.
11 தேசிய வங்கிகள் உள்பட 37 வங்கிகளில் போடப்பட்டிருந்த முதலீடுகள் சி.எம்.சி. சாலை இந்தியன் வங்கிக்கு மாற்றப்பட்டு அமைச்சரின் பினாமி நிறுவனங்களுக்கு, அவை வழங்கப்பட வேண்டிய துறைகளுக்கு தொடர்பில்லாமல் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு வழங்கப்பட்ட தொகை ரூ.85, 76, 48, 648 ஆகும். இவற்றின் மூலம் ஆர்.மயில் வாணன், மற்றும் ஏற்கனவே கூறப்பட்ட அமைச்சரின் பினாமி நிறுவனங்கள் பயனடைந் துள்ளன. எஸ்.பி.வேலுமணி தானே தனி யாக தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி சீர்குலைவதற்கு காரணமாக இருந்துள்ளார். அரசாணையின்படி 7 குளங் கள் பொதுப் பணித்துறையிட மிருந்து மாநகராட்சிக்கு பராமரிப் பதற்காக மாற்றப்பட்ட போதிலும், அதில் இடம்பெறாத குறிச்சி குளத்திற்கு களைகள் அகற்ற ரூ.29,80,000 அளிக்கப்பட்டுள்ளது. எனவே, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அளிக்கப்பட்டுளள ஆவணங்களைப் பரிசீலித்து, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான புகார்களை பாரபட்ச மின்றி விசாரிப்பதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை முன்வராததால் சென்னை உயர்நீதிமன்றமே தலையிட்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தி.மு.கழகத்தின் சார்பில் அதன் அமைப்புச்செயலாளரும், மாநிலங் களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
DINASUVADU