முதல் நாளில் கணவனுடன் இருக்கும் பெண்கள் இப்படிலாம் யோசிப்பாங்களாம்..!!
திருமணம், முதலிரவு போன்றவற்றில் ஆண்கள் ஆர்வம் கொண்டிருப்பதை வெளிப்படையாகவே அறிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவே முடியாது.
திருமணம், முதலிரவு போன்ற தருணத்தில் பெண்கள் பெரும்பாலும் பதட்டமாகவே காணப்படுவார்கள். காதல் திருமணத்தில் இந்த பதட்டம் குறைவாக தான் இருக்கும். ஆனால், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தான் பதட்டம் உச்சி முதல் கால் வரை தொற்றிக் கொள்ளும்.
அதிலும் குறிபாக, முதலிரவன்று பெண்களுக்கு இருக்கும் பதட்டத்தை சொல்லி புரிய வைக்க முடியாது. புதிய இடம், தெரியாத நபர், அவருடன் முதன்முதலில் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் தருணம் என அவர்களுடைய உணர்வுகள் அவர்களுக்கு மட்டுமே புரியும்.
தன்னைப் பற்றி அவர் என்ன நினைப்பார், அவர் எப்படி நடந்துக் கொள்வார் என பெண்களின் மனது எண்ணங்களால் சூழ்ந்திருக்கும்.
இதுபோன்ற சீரியஸான விஷயங்களையும் தாண்டி பெண்கள் சில வேடிக்கையான விஷயங்களையும் முதலிரவின்போது நினைத்துப் பார்க்கிறார்கள்.
முதலிரவின் போது தனது மேக்கப்பை முழுமையாக களைத்துவிடலாமா? வேண்டாமா என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் இருக்கிறதாகக் கூறப்படுகிறது.
வெளியிடங்களுக்குச் சென்று வேறு ஒருவரது குளியலறையை ஒருமுறை பயன்படுத்தவே பெண்கள் நிறைய தயங்குவார்கள். இதில், நாளையிலிருந்து வேறு ஒரு நபரின் குளியலறையை தான் பயன்படுத்த வேண்டுமா? என்ற எண்ணமும் அவர்களிடம் அதிகம் எழுகிறது.
கணவர் தன்னருகில் தூங்கும்போது குறட்டை விடுபவராக இருந்துவிடக் கூடாது என்று கூட நினைப்பார்களாம்.
இரவில் மேக்கப் களைப்பதிலும், பகலில் அவன் எழுந்திருக்கும் முன்னரே மேக்கப் போட்டுவிட வேண்டும் என்றும் கூட சில பெண்கள் எண்ணுகிறார்கள்.
வாய் துர்நாற்றம் என்பது மிகவும் பொதுவானது. காலையில் அனைவருக்கும் தான் இது இருக்கும். ஆனால், புதிய நபர் அவரிடம் காலை வணக்கம் சொல்லும் போதே வாய் துர்நாற்றம் வந்துவிட்டால் என்ன செய்வது?
மேலும் உறங்கும் போதும் தாங்கள் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருக்கிறதாம்.
தூங்கி எழுந்த பிறகு அவன் (கணவன்) எப்படி இருப்பான்? எவ்வாறு நடந்துக் கொள்வான், என்ன பேசுவான் என்பது பற்றி யோசித்துக் கொண்டே இருப்பார்களாம்.
காலை கணவன் அலுவலகம் அல்லது வெளியே செல்லும் போது வாசல் அருகே ஓடி வந்து “என்னங்க பாத்து போங்க.. டாட்டா..” என்றெல்லாம் கூற வேண்டுமா என யோசிக்கிறார்கள்.
எத்தனை நாட்களுக்கு புடவைக் கட்டிக்கொண்டு உறங்க வேண்டும், இரவு உடை அணிந்து உறங்கலாமா, எப்போதிருந்து.. என்பது பற்றியெல்லாம் கூட பெண்கள் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
ஒருவேளை நேரதாமதமாக எழுந்துவிட்டால் தவறாக எடுத்துக் கொள்வார்களோ… புதிய சூழல் எப்படி இருக்கும் என்பது பற்றி எல்லாம் கூட பெண்கள் யோசிக்கிறார்கள்.
பெரும்பாலும், முதலிரவன்று தூங்கி எழுந்த பெண்களுக்கு எழும் முதல் எண்ணம், “நான் எங்க இருக்கேன்?” என்று பெண்களின் மனது கண்டதை எல்லாம் யோசிக்கும் என்று தெரியும். ஆனால், இந்த அளவிற்கு யோசிக்கும் என்பது இப்போது தான் தெரிகிறது.
DINASUVADU