கடும் சரிவை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சொத்து!100 கோடி டாலர் அளவுக்கு சரிவு!
தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சொத்து, அவர் பதவியேற்கும் போது இருந்ததை விட 100 கோடி டாலர் அளவுக்கு குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ட்ரம்ப் அதிபராக பதவியேற்கும் போது சுமார் 380 கோடி டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது 280 கோடி டாலராக சரிந்திருப்பதாக அமெரிக்க சந்தை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மன்ஹாட்டனில் (Manhattan) உள்ள ட்ரம்ப் டவரில் ட்ரம்பிற்கு சொந்தமான கோல்ப் (Golf) மைதானங்களில் கிடைத்து வந்த வருவாய் கணிசமாக குறைந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ட்ரம்பிற்கு சொந்த மான 16 கோல்ப் மைதானங்கள் மூலமாக கிடைத்து வந்ததில் 70 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வருவாய் சரிந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புளோரிடாவில் உள்ள ட்ரம்பிற்கு சொந்தமான க்ளப் உட்பட மேலும் பல ரிசார்ட்டுகள் மூலமாக கிடைத்த வருவாயும் கடுமையாக சரிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.