கடலை பருப்பு போண்டா செய்வது எப்படி தெரியுமா ?
- சுவையான கடலை பருப்பு போண்டா செய்வது எப்படி?
நமது அன்றாட வாழ்வில் அனுதினமும் புது, புது உணவு வகைகள் கண்டுபிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். இதில் நாம் அதிகமாக காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்தும் போது, அதாவது தனீருடன் சேர்த்து சாப்பிடுவது உண்டு.
தற்போது இந்த பதிவில் கடலை பருப்பு போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கடலைப்பருப்பு – ஒரு கப்
- வெங்காயம் – 1
- பூண்டு பல் – 1
- இஞ்சி விழுது – அரை ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
- கறிவேப்பிலை – 1 கொத்து
- சோம்பு – 1 ஸ்பூன்
- எண்ணெய் – தேவைக்கேற்ப
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும். ஊறிய கடலைப்பருப்புடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல் கொர கொரப்பாக அரைத்தெடுக்க வேண்டும்.
பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, மேலும் ஒரு சுற்று சிற்றி எடுக்க வேண்டும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் பருப்பு கலவையை உருண்டையாக உருட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். தற்போது சுவையான கடலை பருப்பு போண்டா தயார்.