கடலில் மூழ்கி காணாமல் போன தீவு..அதிர்ச்சியில் ஜப்பான்..!!
ஜப்பான் எப்போதும் கடுமையான பூகம்பங்கள், சுனாமி என்று கடும் இயற்கைச் சீற்றங்களை, தேசியப் பேரிடர்களை அடிக்கடி சந்தித்து வரும் நாடு என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே. இந்நிலையில் வடக்கு ஜப்பானில் உள்ள சிறிய தீவு ஒன்று காணாமல் போயுள்ளது ஜப்பான் அதிகாரிகளிடத்தில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து இந்தத் தீவு கடல்நீரில் மூழ்கிவிட்டதா என்று ஆய்வு மேற்கொள்ள ஜப்பான் முடிவெடுத்துள்ளது.
ஆனால் இந்தத் தீவு திடீரென மறைந்து போனதால் கடல் எல்லை விவகாரத்தில் ஜப்பானுக்கு சற்றே பின்னடைவு ஏற்படும் என்று ஜப்பான் கருதுகிறது. தீவு காணாமல் போனால் என்ன என்று நமக்குத் தோன்றலாம், ஆனால் அதன் கனிமவள ஆதாரங்கள் ஒரு தேசத்துக்கு முக்கியமானது, அந்த வகையில்தான் ஒகினோடோரி தீவுகளை தனிச்சிறப்பான பொருளாதார மண்டலமாக ஜப்பான் வைத்துள்ளது.
கடும் பூகம்பம் சுனாமிகளால் ஜப்பான் தன் தீவுப்பகுதிகளை இழந்தாலும் சில வேளைகளில் புதிய நிலப்பகுதிகளும் அவற்றுக்குக் கிடைத்துள்ளன. அப்படித்தான் 2015-ல் 300மீ பரப்பளவுள்ள ஒரு நிலத்தொகுதி ஹொக்காடியோ தீவுப்பகுதியில் தோன்றியது.இந்த நிகழ்வு புதிரான பூகம்ப நடவடிக்கையால் இருக்குமோ என்று பயந்தனர், ஆனால் நிலவியல் ஆய்வாளர்கள் நிலச்சரிவினால் நீருக்கு அடியில் இருக்கும் இது மேலே வந்திருக்கும் என்று கூறினர்.
dinasuvadu.com