கடன் மறுப்பு மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் காரணங்களால் ஆஸி.சுரங்க ஒப்பந்ததை ரத்து செய்தது அதானி குழுமம்…!
மெல்போர்ன்:கடந்த வருடம் இந்தியாவின் அதானி குழுமம், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தீவில் உள்ள கார்மைக்கெல் நிலக்கரி சுரங்கத்தை மேம்படுத்துவதற்காக 16.5 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்துக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.ஆனால் அதானி குழுமம் அத்தீவில் சுரங்கம் தொடங்குவதற்கு அதனை கைப்பற்ற முனைந்தர்கும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.மிகப்பெரிய போராட்டங்களையும் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளர் மக்கள் நடத்தினர். இதற்காக அதானி நிறுவனம் வடக்கு ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு வசதிகள் (என்ஏஐஎப்) அமைப்பிடம் 900 மில்லியன் டாலர் கடனுதவி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. ஆனால் கடந்த வாரம் அதானி நிறுவனத்திற்கு 900 மில்லியன் டாலர் கடனுதவி அளிக்க ஒப்புதல் மறுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் டவ்நெர் சுரங்க நிறுவனத்துடனான 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குயின்ஸ்லாந்து அரசாங்கம் 1 பில்லியன் டாலர் காமன்வெல்த் கடனை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதால் செலவை குறைக்கும் வகையில் டவ்நெர் நிறுவனத்துடனான நிபந்தனைக்குட்பட்ட 2.6 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அதானி ரத்து செய்கின்றது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com