கஜாவை எதிர்கொள்ளும் விதம் ….குவியும் பாராட்டு…அசத்திய தமிழக அரசு…!!
கஜா புயல் பாதிப்பில் போர்க்கால நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு அரசியல் கட்சிகள் பாராட்டு தெரிவித்து உள்ளன.
கஜா புயல் இன்று அதிகாலை கஜா புயல் மோசமாக தாக்கியது. கரையை கடந்த கஜா புயலை அடுத்து தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.தமிழக அரசு போர்க்கால முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. தமிழகம் முழுக்க ஐஏஎஸ் அதிகாரிகள் தாயார் நிலையில் இருக்க வைக்கப்பட்டனர். பேரிடர் மீட்பு படை களமிறங்கியது. அமைச்சர்கள் அனைவரும் மொத்தமாக களமிறங்கினார்கள். 500-க்கும் அதிகமான மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டது. தமிழகம் முழுக்க மருத்துவ குழுக்கள் சென்றது.
இந்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் மிகப்பெரிய பேரிடரில் இருந்து தப்பித்து இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பலர் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டார்.அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று இரவு முழுக்க 108 ஆம்புலன்ஸ் சேவைகளை முடுக்கிவிட்டு இருந்தார். அது மட்டுமில்லாமல் களத்தில் இறங்கி நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களையும் அமைத்து இருந்தார். அதேபோல் இன்னும் சில அமைச்சர்களும் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள்.
dinasuvadu.com