ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கின் தீர்ப்பை யாரும் விமர்சிக்கக் கூடாது!அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்,காவிரி விவகாரத்தில் மத்திய அமைச்சருக்கும், நீர்வளத்துறை செயலாளருக்கும் கண்டனம் தெரிவித்ததே, மத்திய அரசுக்கான கண்டனம்தான் என விளக்கம் அளித்துள்ளார்.
சித்திரை முழு நிலவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள கண்ணகி சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதேபோல், பாவேந்தர் பாரதிதாசனின் 128வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கின் தீர்ப்பை காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சிக்கக் கூடாது எனக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.