ஓரின சேர்க்கைக்கு ஆசை…..அழகான மனைவியை கொலை கொடூர கணவர்…!!

Default Image
ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்று அழகான மனைவியை கணவரே கொலை செய்துள்ளார்.
இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள மிட்டில்ஸ்பரோ என்ற இடத்தில் வசித்து வந்தவர் ஜெசிகா படேல் (34). இவரது கணவர் மிதேஷ் படேல் (37).இவர்கள் இருவரும் சேர்ந்து அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி குடும்பத்தை கவனித்து வந்தனர்.
ஜெசிகா படேல் கடந்த மே மாதம் 14-ம் தேதி  வீட்டில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இந்த மரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணவர் மிதேஷ் படேலிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நான் கொலையை செய்யவில்லை என்று மறுத்தார்.விசாரணையில் மிதேஷ் படேல் தெரிவித்த போதுநான் வீட்டுக்கு வந்த போது, மனைவியின் கைகள் கட்டப்பட்டிருந்தது என்றும் என் மனைவியை கொலை செய்து கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.
சந்தேகம் அடைந்த போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.அதில் மிதேஷ் படேல் ஓரின சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ‘ஆப்’பை மிதேஷ் பதிவிறக்கம் செய்து மூலம் டாக்டர் அமித் படேல் என்பவருடன் ஓரின சேர்க்கையாளர்களாக பழகி டாக்டர் அமித் படேலுடன் வாழ   மனைவியை கொல்ல திட்டமிட்டுள்ளார்.
மனைவியை எப்படி கொலை செய்ய , பிரிட்டனில் கூலிப் படையை ஏற்பாடு செய்யலாமா என பல கேள்விகளுக்கு இணையதளத்தில் பதில் தேடியிருக்கிறார்.
மனைவி ஜெசிகா படேல் பெயரில் 20 லட்சம் பவுண்ட் இன்சூரன்ஸ் பாலிசி பணத்தை பெற்றுக் கொண்டு, தனது ஓரின சேர்க்கை  நண்பர் அமித் படேலுடன் ஆஸ்திரேலியாவில் குடியேற மிதேஷ் திட்டமிட்டதையும் போலீசார் கண்டு பிடித்தனர்.இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் தொடங்கியது. அப்போது, மிதேஷ் படேலுக்கு எதிராக சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் போலீஸார் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்தனர். அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்து பார்த்த டெஸ்ஸைட் கிரவுன் நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் கோஸ், இந்த வழக்கில் கணவர் மிதேஷ் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதி வழக்கை ஜூரியிடம் ஒப்படைத்தார்.இந்த வழக்கை 3 பெண்கள், 3 ஆண்கள் அடங்கிய ஜூரி குழு தொடர்ந்து விசாரித்து வந்தது.அனைத்து விசாரணைகளும் முடிந்து தீவிர ஆலோசனை செய்த ஜூரி குழுவினர், மிதேஷ் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்