ஓராண்டில் அதிக போட்டிகள் வென்ற கேப்டன் கோலி : பாண்டிங்கை பின்னுக்கு தள்ளினார்!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்கிற கணக்கில் வென்றதன் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு அடுத்து தொடர்ந்து 9 டெஸ்ட் தொடரை வென்ற அணி என்கிற பெருமையை பெற்றுள்ளது. இந்த தொடரில் ஆட்டநாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் கோலிக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய கேப்டன் கோலி சதமில்ல்லாமல் இன்னொரு பெரிய சாதனையை செய்துள்ளார். அது என்னவென்றால், ஒரு ஆண்டில் அதிக போட்டியை தலைமையேற்று வென்று ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்துள்ளார். 2015 ஆம் ஆண்டில் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 30 வெற்றிகள் பெற்றதே சாதனையாக பார்க்கப்பட்டது. தற்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்தாண்டு 31 போட்டிகள் வென்றதன் மூலம் பாண்டிங் சாதனை தகர்க்கபட்டது.
இலங்கை அணி கேப்டன் ஜெயசூர்யா 2001 ஆம் ஆண்டில் 29 வெற்றிகளை பெற்று கொடுத்தார். 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் பாண்டிங் ஆஸ்திரேலிய அணியை 29 போட்டிகள் வெற்றி பெற செய்தார். பிறகு தென் ஆப்பிரிக்கா கிரிகெட் அணி ஸ்மித் தலைமையில் 2007ஆம் ஆண்டு 29 வெற்றிகளை பெற்றார்.