ஒரே வருடத்தில் அதிக சிக்சர் அடித்த வீரர் : ரோகித் சர்மா : மொத்தம் 64 சிக்சர்
இந்திய கிரிகெட் வீரர் ரோகித் சர்மா நேற்று இலங்கைக்கு எதிராக 35 பந்தில் சதம் அடித்து டேவிட் மில்லர் சாதனையை சமன் செய்துள்ளார். இவர் இந்த வருடம் இன்னும் நிறைய சாதனைகளை செய்து வருகிறார்.
ஒரு வருடத்தில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்துள்ளார். ஏற்கனவே 2015ஆம் ஆண்டு டிவில்லியர்ஸ் ஒரே வருடத்தில், 63 சிக்சர் அடித்து சாதனை படைத்து இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ரோகித் 64 சிக்சர் அடித்து முறியடித்துள்ளார்.
source : dinasuvadu.com